<.................................................................................................................... rose blooming ....................................................................................................................>

"ITI ALUMNI ASSOCIATION மலர் வெளியிடுதல்" அன்புள்ள முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்களே உங்களுக்கு ஒரு சிறப்பு செய்தி. இன்றில்(04-01-2013) இருந்து ஒருமாத காலத்திற்குள் ITI ALUMNI ASSOCIATION க்கான சிறப்பு மலர் வெளியிடுதல் என்ற தீர்மானம் நிறைவேற்ற பட்டது. அதன்படி தங்கள் நண்பர்களிடமும்,மாணவர்களிடமும் தாங்கள் ITI படித்தபோது நடந்த மலரும் நினைவுகள் அல்லது நல்ல கருத்துக்களை (300வார்த்தைகளுக்குள்) பகிர்ந்து கொள்ள உடனே அனுப்ப வேண்டிய முகவரி : ititrichy14@gmail.com

Wednesday 9 January 2013

ITI ALUMNI ASSOCIATION இனிய பொங்கல் திருவிழா


முன்னாள்  மாணவர்களே உங்களுக்கு ஓர் சர்க்கரை பொங்கல் செய்தி .
ITI  ALUMNI ASSOCIATION அமைப்பின் மூலம் நமது திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகின்ற 10-01-2013 அன்று காலை 10.00 மணி அளவில் இங்கு படிக்கும் அனைத்து (1200 nos  ) மாணவசெல்வங்களுக்கும் இனிய பொங்கல் திருவிழா எங்கள் துணை இயக்குநர் அவர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டு அனைவருக்கும் அளவில்லா சக்கரை பொங்கல்,மற்றும் வெண்பொங்கல் அளித்திட முன்னாள் மாணவர் சங்கத்தால் முடிவெடுக்கப்பட்டது. இதை படிக்கும் அனைவரும் இந்த விழா சிறப்பிக்க வாழ்த்துக்களை தயவு செய்து எங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைத்து வேண்டிக்கொள்ளுமாறு மாணவர்கள் சார்பாக கேட்டு கொள்கிறோம் .நன்றி....







வங்கிகளில் 1,00,000 பேருக்கு வேலை வாய்ப்பு – காணொளி
பதிவு செய்த நாள் -
ஜனவரி 07, 2013  at   7:42:08 PM
 
வங்கிகளில் சுமார் 1,00,000 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாக வங்கித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான, பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் இந்த நிதி ஆண்டுக்குள், அதாவது, வருகிற மார்ச் 31ம் தேதிக்குள் 20 ஆயிரம் புதிய ஊழியர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். தவிர, அந்த வங்கியில் 1,200 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். மற்ற பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் பணி விரைவாக நடைபெற்று வரும் நிலையில், மேலும் 20,000 எழுத்தர் பணியிடங்களுக்கு ஊழியர் தேர்வு நடைபெற உள்ளது.
பொதுத் துறை வங்கிகளில் கூடுதலாக 22,000 அதிகாரிகளும் தேர்வு செய்யப்பட இருப்பதாக வங்கித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், புதிய வங்கி மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறி விட்ட நிலையில், புதிய தனியார் வங்கிகள் தொடங்குவதற்கான உரிமம் அளிப்பதற்கான நடைமுறைகளை ரிசர்வ் வங்கி வேகப்படுத்தி உள்ளது. அடுத்த 4 முதல் 6 வாரங்களுக்குள் அதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவிக்க உள்ள நிலையில், அடுத்த நிதி ஆண்டான ஏப்ரல் முதல் புதிய வங்கிகள் தொடங்கப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளன.
எனவே, புதிதாக தொடங்கப்படும் வங்கிகள் மூலம் இந்த ஆண்டில் சுமார் 50,000 பேருக்கு வங்கிப் பணியில் சேரும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இந்த ஆண்டில் மட்டும் சுமார் 1,00,000 பேர், வங்கிகளில் வேலை பெறுவார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


No comments:

Post a Comment

THANK YOU